தமிழகத்தில் இன்று… 5,967 பேருக்கு கொரோனா; 97 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து தமிழகத்தில் கொரானா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352  ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று 1278 பேருக்கு கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்டது இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,677 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 97 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 30 பேர் தனியார் மருத்துவமனையிலும் 67 பேர் அரசு மருத்துவ மனையிலும் உயிரிழந்தனர். இதை அடுத்து, கொரோனாவால், தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,614   ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று 6129 பேர் குணமடைந்தனர். இதை அடுத்து  கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பி யவர்களின் எண்ணிக்கை 3,25,456 ஆக உயர்ந்துள்ளது 

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 53,282 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

சென்னையை அடுத்து, செங்கல்பட்டில் 306 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 320 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 226 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

covid-19-district-wise-aug-24
covid-19-district-wise-aug-24

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.