18/09/2020 3:15 PM

சீனாவுக்கு ஷாக் கொடுத்த இந்திய ராணுவம்! சீன ஆக்கிரமிப்பு லடாக் உச்சியில் முக்கியப் பகுதி மீட்பு!

LAC மீது ஒரு முன்கூட்டிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம், லடாக்கில் பாங்காங் திசோ ஏரியின் தெற்குக் கரையில் ஓர் உச்சியை மீட்டுள்ளது.

சற்றுமுன்...

மதுரையில் அதிர்ச்சி: அரிவாளால் வெட்டி வழிப்பறி! (சிசிடிவி காட்சி)

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடத்தில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம்

அயோத்திக்கு ராமேஸ்வரத்தில் இருந்து அனுப்பி வைக்கப் பட்ட பெரிய மணி, விக்ரகங்கள்!

நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன் ஆகியோர் கொடியசைத்து ரதயாத்திரையை தொடங்கி வைத்தனர்.

கோசி ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த சில நாட்களில் மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

அயோத்தியில் திருப்பதி பெருமாள் கோயில் கட்ட… யோகியிடம் கோரிக்கை!

அயோத்தியில் ஸ்ரீவாரி ஆலயம் அமைக்க யோகி அரசாங்கத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.
ladak
ladak

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், லடாக்கில் இருந்து வரும் செய்தி இந்திய இராணுவத்தின் வலிமையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. LAC மீது ஒரு முன்கூட்டிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம், லடாக்கில் பாங்காங் திசோ ஏரியின் தெற்குக் கரையில் ஓர் உச்சியை மீட்டுள்ளது.

இது இந்திய இராணுவத்திற்கு ஒரு சிறந்த கண்காணிப்பு ஏற்பாடுகளை வழங்கும். மட்டுமல்லாமல், அதே பகுதியில் சமீபத்தில் கட்டப்பட்ட சின்சே போஸ்ட்களில் ஆதிக்கம் செலுத்தவும் உதவும்.

செய்திகளின் படி, ஆகஸ்ட் 29-30 இரவு, இந்திய இராணுவத்தின் ஒரு சிறப்பு செயல்பாட்டு பிரிவு அமைதியாக நகர்ந்து சில நூறு மீட்டருக்குள் இருந்த சின்சே துருப்புக்களை எச்சரிக்காமல் அந்த இடத்தை மீட்டது. உண்மையில், இந்த நடவடிக்கை மிகவும் விரைவாக இருந்தது! சீன துருப்புக்கள் உறங்கிக் கொண்டிருந்தன! மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, இந்திய மூவர்ணக் கொடி அவர்களிடமிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலையின் மீது பறப்பதை அவர்கள் கண்டனர். .

இந்தியாவின் இரகசிய சிறப்பு எல்லைப் படை (எஸ்.எஃப்.எஃப்) தான் இந்த மகத்தான சாதனையைச் செய்தது! பாங்காங் திசோ தெற்கு கரையில் அமைந்துள்ள ரெகுன் & ஸ்பான்குர் அருகில் இந்தப் பகுதி அமைந்திருந்தது. இதன் மூலம், பாங்காங் திசோ முழு தெற்குக் கரைப்பகுதியில் சீன நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்~

இந்த வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்றுதான். முன்னர் முறைகேடாக ஆக்கிரமிக்கப் பட்டு, சீனாவால் உரிமை கோரப்பட்டுக் கொண்டு வந்த இடம், இப்போது இந்திய வசமாகிவிட்டது. இந்த சிகரத்தினைக் கைக்கொண்டதன் மூலம், துல்லியமான பீரங்கித் தாக்குதல்களால் எந்தவொரு சீன இயக்கத்தையும் துண்டிக்க இந்திய ராணுவத்தால் முடியும். இதன் பொருள், மோதல்களின் போது, ​​சீன துருப்புகளை அவற்றின் ஆயுத, அத்தியாவசிய பொருள்கள் விநியோக மையங்களுடன் இணைக்கும் ஒரே சாலையை இந்திய இராணுவம் துண்டித்து விடக்கூடும் .

ராஜதந்திர மற்றும் ராணுவத் தளபதிகளின் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், சீன இராணுவம் பின்வாங்க மறுத்துவிட்டதால், இந்திய இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது .

இந்திய துருப்புக்களின் இந்த விரைவான நடவடிக்கை சீனாவுக்கு எரிச்சலூட்டியுள்ளது! பி.எல்.ஏ – பீப்பிள் லிப்ரேஷன் ஆர்மி, இதற்காக இந்திய ராணுவம் ஆக்கிரமித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. அதன் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்ட் இந்திய ராணுவத்தை, “பல நிலை பேச்சுவார்த்தைகளின்” போது எட்டிய ஒருமித்த கருத்தை மீறியதாக குற்றம் சாட்டியுள்ளது .

ஆனால், நீடித்த பேச்சுவார்த்தைகளால் குளிர்காலம் வரை இந்திய இராணுவத்தை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தாமதப்படுத்தவும், குளிர்காலத்தை எப்போதும்போல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதன் எல்லைகளின் நிலையை மாற்றவும் சீன இராணுவம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்திய இராணுவத்தின் இந்த விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை, இனி சீன இராணுவம் லே பகுதியில் குளிர்காலத்தை செலவிட திட்டமிட்டால், அவர்கள் இந்திய ராணுவத்தின் எளிய தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை தற்போதைய இந்திய நிலைப்பாட்டை தெளிவாக உணர்த்தியுள்ளது. சீனாவின் எல்லைப்புற வடிவமைப்புகளுக்கு இந்தியா தலையசைக்காது என்பதை சீன ராணுவத்திற்கு போதுமான அளவில் நிரூபித்துள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

திமுக Vs அதிமுக: ‘நீட்’டுக்குக் காரணம் யார்? நீளும் வார்த்தைப் போரின் பின்னணி!

அவர் இது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று அறிவுறுத்தியதன் பேரில் அது மேலே தொடரப்படவில்லை...

சமையல் புதிது.. :

ஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்!

வெங்காய பீர்க்கங்காய் மசியல்தேவையான பொருட்கள்வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி....

சினிமா...

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

ஒரு ஸ்மைல்… அழகாய் புடைவை கட்டி… கலக்கும் வாணி போஜன்!

இப்போது வலைத்தளங்களில் தன் புகைப்படங்களை உலவ விட்டு, ரசிகர்கள் தன்னை மறக்காத வகையில் எப்போதும் ‘டச்’சில்  வைத்துக் கொண்டிருக்கிறார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »