சட்டசபையில் பாலியல் தொல்லை: காங். அமைச்சர் மீது கம்யூ. பெண் எம்.எல்.ஏ., டிஜிபியிடம் புகார் மனு

இந்தியா

kerala-lawmaker-biting திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது அடிதடி வன்முறை ரகளை ஏற்பட்டது. அப்போது மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான், பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்ததாக இந்திய கம்யூனிஸ்டு பெண் எம்.எல்.ஏ. பிஜிமோள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 13–ஆம் தேதி கேரள சட்டசபையில் நிதியமைச்சர் கே.எம்.மாணி பட்ஜெட்டைதாக்கல் செய்தார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடிதடி வன்முறையில் இறங்கினர். ஒருவரை ஒருவர் முந்தித் தள்ளி கைககலப்பில் ஈடுபட்டனர். இந்த ரகளையின்போது, பெண் உறுப்பினர்களும் மாட்டிக் கொண்டனர். அந்த நேரத்தில், மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேபி ஜான், இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. பிஜிமோளின் இடுப்பைக் கிள்ளினார். இதற்கு பதிலடியாக அவர் கடித்துவிட்டார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பான படங்களும் வெளியாயின. இதை அடுத்து, பிஜிமோள் கேரள மாநில டி.ஜி.பி.யிடம் நேற்று அமைச்சர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். kerala-assemblyமுன்னதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாஹித் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ரகளையின் போது நடந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஷிபு பேபி ஜான் கூறியதாக ஒரு தகவலை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் மீது பிஜிமோள் புகார் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.