மோடி 70வது பிறந்த நாளில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடல்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
nirav-shah
nirav-shah
  • பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளையொட்டி 70 ஆயிரம் செடிகள்.
  • பசுமையை வளர்ப்பதற்கு சூரத் துணை மேயர் முயற்சி.

சூரத்: துணை மேயர் நீரவ் ஷா பசுமையை பெருக்குவதன் ஒரு பகுதியாக செடி நடுவதில் பார்வையைச் செலுத்தியுள்ளார்.

செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 17ம் தேதிக்குள் 70 ஆயிரம் செடிகளை நட வேண்டும் என்று நிச்சயித்து உள்ளார்கள்.

செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய இந்த செடி நடும் நிகழ்ச்சி 17 வரை நீடிக்கும். சூரத் நகரம் தூய்மையாக, மரங்களோடு பசுமையாக இருக்க வேண்டும் என்பதே தன் இலக்கு என்று கூறினார்.

மக்களுக்கு பசுமையின் பெருமை குறித்து விவரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் செடி நடும் நிகழ்ச்சியை ஆரம்பித்ததாக நீரவ் ஷா குறிப்பிட்டார்.

அதோடுகூட சூரத் மக்கள் தொகைக்குச் சமமாக மரங்களும் இருக்கவேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் விவரித்தார். தற்போது அதிகரித்து வரும் வாகனங்களின் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் உள்ள ஒரே ஒரு ஆயுதம் மரங்களே என்று சூரத் துணை மேயர் கூறினார். ‘பசுமை பாரத தேசம்’ என்பததை நோக்கி மக்களை அடியெடுத்து வைக்க செய்வதற்காக நீரவ் ஷா நாடு தழுவிய மரங்கள் நடும் நிகழ்ச்சி மீது புரிதல் ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மாசு கட்டுப்பாட்டுக்கு முயற்சி செய்வதோடு கூட இயற்கைக்கு தன்னாலான உதவி செய்வதாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.