விஜயராஜே சிந்தியா நினைவாக… ரூ.100 நாணயம் வெளியிட்டார் மோடி!

Published:

rs-100-coin
rs-100-coin

மறைந்த பாஜக., தலைவர் விஜயராஜே சிந்தியா நினைவாக ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

ஜனசங்கம் காலம் முதல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக.,வின் அடித்தள வளர்ச்சிக்கு வித்திட்டவர் காலம் சென்ற பாஜக தலைவர்களில் ஒருவரான ராஜமாதா ஸ்ரீமதி விஜயராஜே சிந்தியா. அவரது 100 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப் படுகிறது.

அவரது தியாகங்களையும், சேவைகளையும் போற்றும் வகையில், அவர் திருவுருவம் பதித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி !

பாஜக., என்ற கட்சி மலர்வதற்கு முன்னுள்ள கட்சியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் ராஜமாதா விஜயராஜே சிந்தியா. அவர், 1919 அக்.,12ல் பிறந்தார். 2001, ஜன.25இல் மறைந்தார்.

vijayaraje-scindia-coin
vijayaraje-scindia-coin

விஜயராஜே பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டு பிரதமர் மோடி விஜயராஜே சிந்தியா நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்நிகழ்ச்சியில் விஜயராஜே சிந்தியா குடும்பத்தினர், விருந்தினர்கள் பலரும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img