வளையல் அலங்காரத்தில் பெஜவாடா துர்கம்மா…!

Published:

bejawada-durgamma2
bejawada-durgamma2

கார்த்திகை மாதம் துவிதியை திதியை முன்னிட்டு விஜயவாடா இந்திரகீலாத்ரி மலைமீது பல வண்ண வளையல்களால் கனக துர்கா தேவியை அலங்காரம் செய்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வளையல்களுக்கு மேலாக ஆலய வளாகம் முழுவதும் அலங்கரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கோவிட் தொற்றுச் சூழலை கவனத்தில் கொண்டு நன்கொடையாக வந்த இரண்டு லட்சம் வளையல்களைக் கொண்டு கோவில் சந்நிதிகளை மட்டுமே அலங்காரம் செய்துள்ளார்கள்.

bejawada-durgamma1
bejawada-durgamma1

இந்த அலங்காரத்திற்காக பெண்கள் வளையல்களை பெருமளவில் எடுத்து வந்தார்கள். வளையல் அலங்காரத்தில் ஜொலிக்கும் அம்மனை தரிசிப்பதற்கு விடியற்காலை 5 மணி முதல் பக்தர்களை அனுமதித்தார்கள். அம்மனுக்கு மஞ்சள் குங்குமம் வளையல்களை சமர்ப்பித்து பூஜை செய்வதற்கு மகளிர் பெருமளவில் வந்தார்கள்.

கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு இந்திரகீலாத்ரிரி மலை மேல் உள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. அம்மனை தரிசிப்பதோடு கூட மல்லேஸ்வர சுவாமியையும் தரிசித்துக்கொண்டு அபிஷேகங்களும் அர்ச்சனைகளும் செய்து வருகிறார்கள்.

bejawada-durgamma
bejawada-durgamma

கார்த்திகை மாதத்தில் இரண்டாவது நாளான சுக்ல துவிதியை யம துவிதீயையாக, சகோதர துவிதீயையாக அழைக்கப்படுகிறது. கார்த்திகை சுத்த துவிதியை அன்று ஒவ்வொரு சகோதரனும் திருமணமான தன் சகோதரியின் கையால் விருந்து உண்ண வேண்டும் என்று லிங்க புராணம் குறிப்பிடுகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அதுவே தற்காலத்தில் பஹினீ ஹஸ்த போஜனம் என்ற பெயரில் பழக்கமாக நிலைபெற்றுள்ளது. இந்த நடைமுறை வட இந்தியாவில் மிக அதிக அளவில் உள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img