திருப்பதி கோயிலில் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன்

திருப்பதி:

திருமலை திருப்பதி கோயிலில், தொடர் விடுமுறை காரணமாக விஐபி தரிசனம் 23-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

இதனை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வைத்து வெள்ளிக்கிழமை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தொடர் விடுமுறையால் வரும் 23-ஆம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை, விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் விஐபி தரிசனத்திற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.