குஜராத்தில் பாஜக., ஆட்சியை தக்க வைக்கும்: கருத்துக்கணிப்பு!

குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

குஜராத்தில் இம்மாதம் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வரும் டிச. 18 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் வியாழக்கிழமை இறுதிக் கட்ட தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, வாக்குக் கணிப்பு முடிவுகள் மாலையில் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் பல தேர்தல்களில் சரியான முடிவுகளை கணித்து வெளியிட்டுள்ள நியூஸ் 24 ஹிந்தி செய்தித் தொலைக்காட்சியின் வாக்குக் கணிப்பில், குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 135 இடங்களில் வெற்றி பெறும்; அதே நேரத்தில் காங்கிரஸுக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா வாக்குக் கணிப்பில் குஜராத்தில் பாஜக 99 முதல் 113 இடங்களிலும், காங்கிரஸ் 68 முதல் 82 இடங்களிலும், பிற கட்சிகள் 1 முதல் 4 இடங்களிலும் வெல்லும் என்று கூறியுள்ளது.
“குஜராத்தில் பாஜகவுக்கு 113 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 66 தொகுதிகளும் நிச்சயமாகக் கிடைக்கும். மற்ற கட்சிகள் 3 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது’ என்று டைம்ஸ் நவ் வாக்குக் கணிப்பு உறுதியாகக் கூறியுள்ளது.
ஏபிபி-சிஎஸ்டிஎஸ் கணிப்பில் குஜராத்தில் காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 64 தொகுதிகள் வரையே கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் பாஜக 117 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா டிவி-விஎம்ஆர் எடுத்துள்ள கணிப்பில் மத்திய குஜராத்தில் பாஜகவுக்கு 23, காங்கிரஸுக்கு 16, தெற்கு குஜராத்தில் பாஜகவுக்கு 24, காங்கிரஸுக்கு 30, வடக்கு குஜராத்தில் பாஜகவுக்கு 30, காங்கிரஸுக்கு 23 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
குஜராத்தில் ரிபப்ளிக் டி.வி- சி-வோட்டர்ஸ் நடத்திய கணிப்பில், பாஜகவுக்கு 108, காங்கிரஸுக்கு 74 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

வாக்குக் கணிப்பு முடிவுகள் பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், “குஜராத் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு எப்போதும் உண்டு என்பது வாக்குக் கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சியினரின் தரம்தாழ்ந்த அரசியலால் மக்கள் குழப்பம் அடையவில்லை’ என்றார்.
குஜராத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 115 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அங்கு கடந்த 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

Topics

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories