ஹிமாச்சலில் பாஜக., ஆட்சி அமையும்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்!

இந்தியா சற்றுமுன்

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக 55 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில் ஹிமாசலில் பாஜகவுக்கு 47 முதல் 55 இடங்களும், காங்கிரஸýக்கு 13 தொகுதிகள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆஜ்தக்-ஆக்சிஸ் வெளியிட்டுள்ள வாக்குக் கணிப்பில் “ஹிமாசலில் பாஜக 47 முதல் 55 இடங்களில் வென்று பாஜக ஆட்சியைப் பிடிக்கும். அங்கு இப்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸுக்கு 13 முதல் 20 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. பிற கட்சிகளுக்கு 2 தொகுதிகள் வரை கிடைக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஹிமாசலில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் 36 இடங்களில் வென்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது பாஜகவுக்கு 26 இடங்களும், பிற கட்சிகளுக்கு 6 இடங்களும் கிடைத்தன.

ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றால் அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கும். அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து நான்காகக் குறைந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.