கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

Published:

murder-2-1
murder-2-1

கள்ள காதல் விவகாரத்தில் ஒரு மனைவியே கணவனை கூலிப்படையை ஏவி கொன்ற விவகாரம் பலரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது .

தில்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள டபுவாவில் உள்ள சானிக் காலனியில் வசிக்கும் தினேஷ் என்பவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார். அவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த தினேஷின் மனைவிக்கு அதே பகுதியில் வசிக்கும் நிதின் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டது. இதனால் அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அவரின் கணவனுக்கு தெரிந்து விட்டது. அதன் காரணமாக அவர்களின் குடும்பத்தில் தினமும் சண்டை நடந்த வண்ணமிருந்தது. அதன் காரணமாக அவரும் அவரின் காதலன் நிதினும் அவரின் கணவனை கொல்ல முடிவெடுத்தார்கள். அதனால் அந்த தினேஷின் மனைவி ஒரு கூலிப்படையை சேர்ந்த அவரது இரண்டு நண்பர்கள் – வினீத் மற்றும் விஷ்ணு ஆகியோரிடம் 40000 ரூபாய் கொடுத்து கணவனை கொல்ல சொன்னார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அதன் காரணமாக ஜனவரி 11ம் தேதி இரவு தினேஷை ஒரு காட்டுப்பகுதிக்கு அந்த கூலிப்படையினர் தூக்கி சென்றார்கள். அப்போது அவரின் மனைவியும் உடனிருந்து கணவனை கொன்றார்கள்.

பின்னர் அவரின் சடலத்தை ஒரு ஒதுக்குபுறமான இடத்தில வீசிவிட்டார்கள். பின்னர் போலீசுக்கு இந்த கொலை விவகாரம் தெரிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது தினேஷின் மனைவியே அவரை கொலை செய்த விவகாரத்தினை கண்டுபிடித்து அவரையும் அவரின் கூலிப்படையினரையும் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

Related articles

Recent articles

spot_img