December 6, 2025, 4:03 PM
29.4 C
Chennai

அதிக படுத்தப்பட்ட தொகையால் இராணுவத் திறன் அதிகரிக்கும்: நன்றி தெரிவித்த பதாரியா!

padhariya
padhariya

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டுள்ளது மிக முக்கிய முடிவு என்று இந்திய விமானப் படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாக இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல கொரோனாவுக்கு பின் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் இதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகைகள் அதிகப்படுத்தப்பட்டன. கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எல்லையில் சீனாவுடனான மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு துறை ஒதுக்கப்படும் தொகையும் சுமார் 7.4% அதிகப்படுத்தப்பட்டது. இந்தாண்டு மட்டும் சுமார் 4 லட்சத்து 78 ஆயிரத்து 195 கோடி ரூபாய் பாதுகாப்பு துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய ஆயுதங்களை வாங்க கடந்த முறை ஒதுக்கப்பட்ட ரூ1.14 லட்சம் கோடியைவிட 18% அதிகமாக ரூ.1.35 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு துறை ஒதுக்கப்படும் தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து இந்திய விமானப் படை தளபதி பதாரியா கூறுகையில், “இந்த கொரோனா காரணமாக நமது நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இந்தச் சூழ்நிலையில், பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது உண்மையில் மிகப் பெரிய விஷயம். இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்தாண்டும்கூட பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்த தொகையைவிட கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவானது. முப்படைக்கும் தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்ய இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் நமது ராணுவத்தின் திறன் அதிகரிக்கும்” என்றார், கடந்தாண்டு இந்தக் கூடுதல் தொகையைக் கொண்டு ஸ்பைஸ் -2000 , ஸ்பைக் டேங்க், எஸ்.ஐ.ஜி துப்பாக்கிகள் ஆகியவற்றை ரஷ்யாவிலிருந்து இந்தியா வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது, அதிலும் குறிப்பாக கல்வான் மோதலுக்கு பின் நிலைமை மிகவும் மோசமானது, எல்லையில் இரு தரப்பு ராணுவமும் தொடர்ந்து வீரர்களை குவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தியா தனது பாதுகாப்பு செலவுகளை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Related Articles

Popular Categories