புது தில்லி:
இப்போது ரூபாய் நோட்டுகள் புதிய வண்ணங்களில் வெளியாகி வருகின்றன. புதிய இந்தியா எனது இந்தியா என்ற முழக்கத்தின் படி, மோடி பிரதமர் ஆன பின்னர் ரூபாய் நோட்டுகள் மாற்றம் பெற்று வருகின்றன.
கடந்த 2016 நவம்பரில் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு ரூ. 2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிதாக வெளியிடப்பட்டன.
இதன் பின்னர் 2017 ஆகஸ்ட் மாதத்தில் புதிய ரூ.50, ரூ.200 நோட்டு அறிமுகமாயின.
இப்போது, புதிய ரூ.10 நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. மகாத்மா காந்தி படத்துடன் சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் அமையும் இந்த நோட்டுக்கு கடந்த வாரம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாம். இதுவரை 100 கோடி எண்ணிக்கையில் ரூ.10 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளதாம்.



