திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த
மேலப்பாவூரில் ஒத்தப்பனையடி சாஸ்தா கோவிலில் கடந்த 2ம் தேதி கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த பித்தளை சூலாயுதம், அருவாள், பித்தளை விளக்கு மற்றும் உண்டியல் பணம் ரூ 300 இவற்றைக் மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி மேலப்பாவூரை சேர்ந்த ராஜ் என்பவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .
சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் வழக்கு பதிவு செய்து கோவிலில் திருடிய நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாவூர்சத்திரம் தென்காசி ரோட்டில் கேடிசி நகர் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பாவூர்சத்திரம் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மேலப்பாவூர் கீழ காலனியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் செல்வம் [வயது29], மற்றொருவர் தென்காசி கீழ பாறையடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் முருகன் 32. என்பதும் இவர்கள் அந்த கோவிலில் திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து திருடிய பொருள்களை போலீசார் மீட்டனர். மேலும் இந்த நபர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திப்பனம்பட்டி ரேசன் கடையின் பூட்டை உடைத்து 40 பாமாயில் பாக்கெட்டுகளை திருடியதும் தெரிய வந்தது. திருடிய பாமாயில் பாக்கெட்டுகளை அருகிலுள்ள நூலகத்தின் மாடியில் ஒளித்து வைத்திருந்தனர். அவைகளை அப்பொழுதே போலீசார் மீட்டனர். இந்த இரண்டு நபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்



