IMG-20210210-WA0035
IMG-20210210-WA0035

‘ராஜ்பவன் அன்னம்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் தெலங்காணா ஆளுநர் தமிழிசை.

ராஜ்பவன் அரசாங்க பள்ளிக்கூடத்தில் நிகழ்ச்சியை கவர்னர் தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு நாளும் காலையில் 500 ஏழை மக்களுக்கு இலவசமாக டிபன், மதியமும் இரவும் மிகக் குறைந்த விலையில் சாப்பாடு… ஏழைகளின் பசி தீர்க்கும் நிகழ்ச்சியை தெலங்காணா கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

‘ராஜ்பவன் அன்னம்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை ராஜ்பவன் அரசு பள்ளியில் துவக்கினார் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாள் காலையும் சுமார் 500 ஏழைகளுக்கு சிற்றுண்டி இலவசமாக கொடுக்க உள்ளார்கள். மதியமும் இரவும் மிகக் குறைந்த விலையில் சாப்பாடு ஏற்பாடு செய்ய உள்ளார்கள்.

இதன் தொடர்பாக தமிழிசை சௌந்தர்ராஜன் உரையாற்றுகையில் காலையிலேயே சிற்றுண்டி எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறினார். ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைகளுக்கு போஷக ஆகாரம் அளிப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

ஊட்டச் சத்து மிகுந்த உணவு அளித்தால் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றார். சரிவிகித உணவு அளித்தால் குழந்தைகள் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் நன்றாக வளர்வார்கள் என்று கூறினார்.

இதன் தொடர்பாக ராஜ்பவன் பள்ளிக்கூட மாணவர்களோடு சேர்ந்து தமிழிசையும் சிற்றுண்டி எடுத்துக்கொண்டார். மாணவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களோடு உரையாடினார்.

சத்திய சாயி சேவா சமிதி உதவியோடு ராஜ்பவன் பாடசாலையில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள், ராஜ்பவனில் பணிபுரியும் ஊழியர்கள், சுற்றுப்புறங்களில் இருக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ருசியான சிற்றுண்டி அளிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending