மருத்துவர் வீட்டில் நகைகள் இருந்த வெள்ளிப் பெட்டி! சுரங்கப்பாதை அமைத்து தூக்கிய திருடர்கள்!

Published:

Screenshot 2021 0227 180132 1 - 2026

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவரின் பங்களாவிலிருந்து வெள்ளி பொருட்கள் அடங்கிய நகைப்பெட்டி திருடப்பட்டது. மருத்துவரின் வீட்டின் அருகே சுரங்கப் பாதை அமைத்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

ஜெய்ப்பூரின் வைசாலி நகரைச் சேர்ந்த டாக்டர் சுனித் சோனி கடந்த 24 தேதி புகார் அளித்தார், தனது வீட்டில் இருந்த வெள்ளியை திருட, அவர்கள் ஒரு சுரங்கப்பாதையை அமைத்ததாக தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருடர்கள், முதலில், சோனியின் பங்களாவுக்கு அருகிலுள்ள காலியான இடத்தை ரூ .90 லட்சத்திற்கு வாங்கியதாகவும், பின்னர் வெள்ளி பெட்டியைத் திருட அவரது அடித்தளத்தில் மூன்று மாதங்கள் ஒரு சுரங்கப்பாதை தோண்டியதாகவும் தெரியவந்தது.

பெட்டியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி பற்றி அறிந்த மருத்துவரிடம் நெருங்கிய ஒருவர் இந்த வழக்கில் தொடர்புடையவர் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் சந்தேக நபர்களை கைது செய்வார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Related articles

Recent articles

spot_img