
திருவனந்தபுரம்: சபரிமலையில் இரு பெண்களை அழைத்து வந்து அசிங்கப் படுத்தியன் மூலம், கேரள அரசு மக்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும், அது கலைக்கப் படவேண்டும் என்றும் சசிகலா டீச்சர் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
ஹிந்து அமைப்பைச் சேர்ந்த சசிகலா டீச்சர், சபரிமலைக்காக துவக்கம் முதலே கடுமையாகப் போராடி வருகிறார். சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னர், அதற்காக எதிர்ப்பைப் பதிவு செய்து போராடினார் சசிகலா டீச்சர்.
தீர்ப்புக்குப் பின்னர் முதல்முறையாக சபரிமலை நடை திறக்கப் பட்ட போது நேரடியாக இருமுடி கட்டி மாலை அணிந்து சபரிமலை நோக்கிச் சென்றார் சசிகலா டீச்சர். அப்போது கேரள போலீஸார் அவரைத் தடுத்து கைது செய்தனர். சபரிமலையில் நிலவும் அசாதாரண சூழலில் சசிகலா டீச்சர் மலைக்குச் சென்றால் போராட்டம் வலுக்கும் என்று கூறினர்.
இந்நிலையில், இன்று காலை இரண்டு பெண்களை கேரள அரசு அழைத்துச் சென்று சபரிமலை பாரம்பரியத்தைத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டது. இதனை கண்டித்துள்ள சசிகலா டீச்சர், சபரிமலைக்கு மாவோயிஸ்டுகளையும், தாலிபான்களையும் அழைத்துச் சென்று, பயங்கரவாதிகளின் புகலிடமாக சபரிமலையை கேரள அரசு மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஜனம் மலையாள தொலைக்காட்சிக்கு சசிகலா டீச்சர் அளித்த பேட்டியில், அவர் கூறியவை…
போலீசார் என்ற போர்வையில் சபரிமலையில் மாவோயிஸ்ட் குண்டர்கள் சீருடை அணிந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். கேரள போலீஸாரின் சீருடையை மாவோயிஸ்டு குண்டர்கள் அணிந்து கொண்டு, சபரிமலை ஆசாரங்களை கெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதனால் சபரிமலை சந்நிதியை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தை சேர விடாமல் தடுத்து, இரு பெண்களை அழைத்துச் சென்றுள்ளனர். சாதாரண உடையில் போலீஸாரும், போலீஸ் உடையில் குண்டர்களும் சுற்றி நின்று அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்குள்ள போலீஸ்காரர்களை விசாரித்தால் அங்கு என்ன நடந்தது என்று தெரியும்! சபரிமலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் பலரே மனம் வெதும்பி, மாநில அரசின் கயமைத் தனத்தை வெளிப்படுத்தி வருந்துகிறார்கள். போலீஸாரை ஓரங்கட்டிவிட்டு, குண்டர்கள் உதவியில் அரசு இந்த வேலையைச் செய்திருக்கிறது. போலீசார் பலர் மன சங்கடப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தான் முன்னர், போலீசார் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுகக் முடியாது, அவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி இருந்தார்கள். ஆனால் அதையும் மீறி நடந்திருக்கிறது என்றால் இங்கே ஏதோ சந்தேகம் ஏற்படுகிறது. மக்களுடைய உயிர்களை பாதுகாப்புதான் போலீசின் கடமை இது மாவோயிஸ்டுகளுக்கும் நக்சல்களுக்கு உதவி இருப்பதாகவே தெரிகிறது
போலீசார் இந்த விதத்தில் பயன்படுத்தப்பட்டால் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பக்தர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்! நிச்சயமாக கோயிலில் சுத்தம் செய்யவேண்டும்! சன்னிதானத்தை மூடவேண்டும்! முக்கியமாக நம்பிக்கை துரோகம் இழைத்த கேரள சர்க்காரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!… என்று ஆவேசத்துடன் கூறினார்.



