கடனை திரும்ப வாங்க வந்த ஆடிட்டர்! ஆடிய நாடகத்தால் பெண்ணிற்கு நேர்ந்த கதி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
woman - 2026

மும்பையில் குர்லாவில் வசிக்கும் 32 வயதான ஃபுர்கான் கான் என்பவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார்.

அவர் சமூக ஊடகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒரு 25 வயதான பெண்ணோடு நட்பு கொண்டார். பின்னர் இருவரும் அடிக்கடி ஊடகத்தில் அரட்டையடித்து வந்தனர்.

அதன் பிறகு அந்த பெண் அந்த ஆடிட்டரிடம் 10000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதை காரணமாக வைத்து அந்த ஆடிட்டர் அந்த கடனை கேட்க போவது போல அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போயுள்ளார்.

அப்போது அந்த பெண்ணிடம் நாம் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். அதை நம்பிய அந்த பெண் அவருடன் பாலியல் உறவில் பலமுறை இருந்துள்ளார்.

அதன் பிறகு சிலநாள் கழித்து அந்த ஆடிட்டர் அந்த பெண்ணின் உறவினை முறித்து கொண்டுள்ளார். பிறகு அந்த பெண் பல முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை .அவரின் ஆபீஸிற்கு சென்றாலும் அவரை பார்க்க முடியவில்லை.

இதனால் தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை உண்ர்ந்த அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த ஆடிட்டர் மீது புகார் கூறினார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆடிட்டரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது அந்த குற்றம் சாட்டப்பட்ட ஆடிட்டர் மார்ச் 22 வரை போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.