திருமணமாகி ஒரே வாரம்.. உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!

Published:

Gobi Maheswari - 2026

திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த கோபி(35), ஆலந்தூர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி (35) இருவருக்கும் கடந்த மாதம் 14ஆம் தேதி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

பின்னர் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். கோபி ஆட்டோ ஓட்டி வருகிறார். அப்போது கணவரை இழந்த மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளளது.

வழக்கம்போல் நேற்று இரவும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர். எனினும் ஆத்திரம் அடங்காத கோபி மனைவியை கொலை செய்துள்ளார்.

அதாவது, நள்ளிரவு 12 மணியளவில் தூங்கி கொண்டிருந்த மனைவி மகேஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே மகேஸ்வரி துடிதுடித்து இறந்துள்ளார். பின்னர் மனைவியின் உடலுடன் தனியாக இருந்த கோபி பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் மணவாள நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

அப்போது மனைவியை கழுத்து அறுத்து கொன்றுவிட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சரணடைந்த கோபியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியை கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img