விட்டு சென்ற காதலன் மீது ஆசிட் ஊற்றி கொலை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Acid - 2026

ஆக்ரா நகரத்தைச் சேர்ந்தவர் சோனம். இந்த பெண் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அங்கு ஆய்வகத்தில் உதவியாளராக பணிபுரிந்த தேவேந்திரா என்ற ஆணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட காலமாக ஒன்றாக சுற்றி வந்தனர்.

ஃபேன் ரிப்பேர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது. இதனால் சோனம் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

தனக்கு கிடைக்காத தேவேந்திரா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று மனதுக்குள் வஞ்சகத் திட்டம் தீட்டியுள்ளார். இது தேவேந்திராவுக்கு தெரியாது.

இந்த நிலையில், தனது வீட்டில் மின் விசிறி பழுதாகி விட்டதாகவும், அதை சரி செய்து தர நீ தான் வரவேண்டும் என்று தேவேந்திராவா தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார் சோனம்.

இதை நம்பிய அவர் சோனம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து தேவேந்திரா மீது வீசியுள்ளார் சோனம்.

துடிதுடித்துப் போய் அங்கேயே சுருண்டு விழுந்த தேவேந்திராவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் உயிரிழந்துவிட்டார். இப்படி திராவகம் வீசிய போது கைகள் உள்ளிட்ட சில இடங்களில் சோனத்திற்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

அவர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கொலை வழக்கில் சோனம் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில், இளம் சமூகத்திடம், எந்த அளவு சகிப்புத் தன்மை இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது, வன்முறை மனநிலை மக்களிடம் எப்படி வந்தது என்பது பற்றி யோசிக்க வைத்துள்ளது இந்த சம்பவம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.