corono test
corona test

500 ரூபாய்க்கு கொரானா நெகடிவ் போலி சான்றிதழை வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

24 வயதான ஃபாரூக் ஷேக் மற்றும் 32 வயதான ரஷீத் ஷாகில் ஷேக் ஆகியோர் மும்பையில் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஜோகேஸ்வரியில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் கொரானா பரிசோதனை செய்யும் நிலையம் நடத்தி வருவதாக வாட்ஸ் அப்பில் பலருக்கு தகவல் வந்தது. அதே சமயம் எங்கும் இல்லாத அளவிற்கு மலிவு விலையில் கொரானா பரிசோதனை செய்து தரப்படுவதாகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதை பார்த்த பல ஆண்களும் பெண்களும், தாங்கள் வெளி நாட்டு பயணம் மற்றும் வெளியூர் பயணத்திற்கு செல்ல இங்கு கொரானா பரிசோதனை செய்து அந்த அறிக்கையை கொடுத்துவிடலாம் என்று நினைத்தனர்.

அதன் படி டெஸ்ட் செய்யாமலே ரூபாய்.500 கொடுத்தால் நெகடிவ் சான்றிதழ் கொடுப்பதாக பேரம் பேசி பலருக்கு வழங்கியுள்ளார்கள்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

இதை பார்த்த பெண் ஒருவர், தனது வாட்ஸ் அப் விளம்பரத்தினை நம்பி பரிசோதனைக்கு சென்ற போது, 500 ரூபாய் அனுப்பினால் உடனே வாட்ஸ் அப்பில் நெகட்டிவ் சான்றிதழ் அனுப்புவதாக கூறியுள்ளனர்.

அதன் படி அவர்கள் ஒரு நெகடிவ் செர்டிபிகேட்டை, லாபரேட்டரி முத்திரையுடன் போலியாக பலருக்கு அனுப்பியுள்ளதையும் அவரிடம் காண்பித்தார்கள். ஆனால் இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, போலீசார் அந்த இரு நபர்களை பற்றி விசாரித்து, அவர்களின் மோசடி வேலைகளை கண்டு பிடித்து. பின்னர் போலீசார் மோசடி மற்றும் மோசடி தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending