புது தில்லி: வங்கிகளுக்காக ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் ரெப்போ வட்டி விகிதம் 7.75 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் அறிவிப்பால், வீடு மற்றும் வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 15 ஆம் தேதியன்று 8 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம் .25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 7.75 சதவிகிதமாக இருந்தது. 2 மாதத்தில் 2 ஆவது முறையாக வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளதாலும், விலைவாசி குறைந்துள்ளதாலும் வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விகிதக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari