கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றுபவர்கள் களதளபதிகள்: பிரதமர் பாராட்டு!

இந்தியா சற்றுமுன்
modi 1
modi 1

கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

கடினமான சூழலுக்கு இடையிலும் அதிகாரிகள் தங்கள் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகின்றனர்.

modi

கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றி வரும் நீங்கள் அனைவரும் இந்த போரின் களதளபதிகள்.

கொரோனா 2வது அலையில் நாம் ஊரகப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான சவால்கள் உள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் ஆயுதம்.

கொரோனா தடுப்பூசி தொடர்பான அனைத்து கட்டுக்கதைகளுக்கும் எதிராக நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும்.

கொரோனா தடுப்பூசி விநியோகத்தை பெரிய அளவில் அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.