Bar க்கு பக்கத்து வீட்டு பெண்ணின் பெட்ரூமில் நுழைந்து ஆடையின்றி நின்ற போதை ஆசாமி!

Published:

woman
woman

மது போதையில் ஒரு பெண்ணின் பெட் ரூமிற்குள் நிர்வாணமாக நுழைந்த நபர் கைது செய்யப்பட்டார் .

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாண்டேபல்ய பகுதியில் வசிக்கும் ரீனா என்ற பெண்ணுக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது .

அவர் தன்னுடைய சகோதரியுடன் அந்த வீட்டில் வசிக்கிறார். அவரின் கணவர் காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிகிறார்.

இந்நிலையில் அவரின் வீட்டிற்கருகே ஒரு பார் உள்ளது. அந்த பாரில் தினம் ஜெயபிரகாஷ் என்ற 45 வயதான நபர் குடிப்பது வழக்கம்.

கடந்த ஞாயிற்றுகிழமையன்று அந்த பாரில் குடித்து விட்டு பக்கத்திலிருக்கும் ரீனா வீட்டு பெட் ரூமிற்குள் நுழைந்து உள்ளார். பிறகு அந்த பெட்ரூமில் ஒளிந்து கொண்டு உள்ளார் .

அப்போது ரீனா அந்த அறைக்குள் வந்து உடையை மாற்றி உள்ளார். அந்த நேரம் ஜெய்பிரகாஷ் துணியில்லாமல் நிர்வாணமாக இருந்து அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்து உள்ளார்.

ரீனாவுக்கு கண் தெரியாததால் இதை கவனிக்க முடியவில்லை. அந்த நேரம் பார்த்து அவரின் சகோதரி அறைக்குள் வந்து உள்ளார். அப்போது அங்கு ரீனாவுக்கு அருகே அந்த நபர் நிர்வாணமாக நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே அவர் கூச்சல் போட்டுள்ளார். அதை கேட்டு அந்த குடிகாரர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

பின்னர் போலீசில் அந்த நபர் மீது புகார் கூறினர். போலீசார் வழக்கு பதிந்து அந்த ஜெயபிரகாஷை கைது செய்தனர்.

Related articles

Recent articles

spot_img