காய்கறி வியாபாரம் முடித்து வீட்டிற்கு திரும்பிய மூதாட்டி! பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்த இளைஞன்!

Published:

vankodumai - 2026

பீகாரை சேர்ந்த பாட்டிக்கு 62 வயது. மகன், பேரன்களுடன் தில்லி டலுபுராவில் வசித்து வருகிறார். மகன் நொய்டாவில் ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.

மகன் வருமானம் போதாது என்பதால், பிழைப்புக்காக தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் பாட்டி. பகலெல்லாம் வியாபாரம் செய்துவிட்டு, இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைத்து சாப்பிடுவார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காய்கறி விற்க சென்றிருக்கிறார். அவருடன் பேரனும் சென்றுள்ளார். வியாபாரத்தை முடித்துக்கொண்டு சமைத்து சாப்பிட வேண்டும் என்பதற்காக பேரனை அழைத்து கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தார் பாட்டி. அப்போது பின்னாடியே ஒரு 30 வயது இளைஞன் வந்துகொண்டிருந்தார். திடீரென பாட்டியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்

இதை பார்த்து பதறிபோன பாட்டி, அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார் ஆனாலும் அந்த இளைஞர், பாட்டியை வன்புணர்வு செய்துள்ளார். விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, கத்தியை எடுத்து பாட்டியை குத்திவிட்டார்.

அரைகுறையாக உயிர் ஊசலாட கூடாது என்பதற்காக மொத்தம் 25 முறை கத்தியால் குத்தி, அப்போதும் ஆவேசம் அடங்காமல், கழுத்தையும் அறுத்து விட்டார். இதையெல்லாம் கண்ணெதிரே பார்த்த பேரனோ பதறி கதறி கொண்டிருந்தான்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்த சம்பவம் நடந்தது பாட்டியின் வீட்டு பக்கத்தில். இதனிடையே வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மகன், அம்மாவை காணாமல் தேடி வந்துள்ளார். அப்போது தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து விஷயத்தை போலீசுக்கும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னர், போலீசார் இதுசம்பந்தமாக வழக்கு பதிவு செய்ததுடன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த பாட்டியின் வீட்டருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் தென்பட்ட இளைஞனை தட்டி தூக்கிவிட்டனர்.

இப்போது அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. லாக்டவுன் சமயத்தில், நாளுக்கு நாள் வடமாநிலங்களில் குற்ற செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை தந்து வருகிறது

Related articles

Recent articles

spot_img