எடை அதிகம்.. குறைத்த மாணவி.. ஒட்டிப் போன முகத்தால் மனம் வெறுத்து தற்கொலை!

Published:

lady susid 2 1
lady susid 2 1

உடல் எடை குறைந்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் ப்ரீத்தி கிருஷ்ணா என்ற மகள் இருந்துள்ளார்.

இந்நிலையில் அதிக உடல் எடை கொண்ட ப்ரீத்தி கிருஷ்ணா எடையை குறைப்பதற்கான சிகிச்சையை பெற்று ஒல்லியாக மாறிவிட்டார்.

இதனால் உடல் மெலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட பிரித்தி கிருஷ்ணா மனமுடைந்து தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகிலுள்ள சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ப்ரீத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img