காணாமல் போன பூனை; கண்டுபிடித்துத் தந்தால் ரூ.30 ஆயிரம் சன்மானம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
hyderabad cat rs 30k announced - 2026

பூனைக்காக தேடல்… பூனையை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 30000 ரூ பரிசுத்தொகை அறிவித்துள்ளார் ஒருவர்.

ஹைதராபாத் டோலிசௌகி என்ற இடத்தைச் சேர்ந்த செரினா என்பவர் வளர்ப்புப் பிராணிகளில் விருப்பம் உள்ளவர். சிறு வயதிலிருந்தே வீட்டில் பலவிதமான வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புதிதாகப் பிறந்த ஜிஞ்சர் என்ற பூனையை அடாப்ட் செய்துகொண்டு வளர்த்துவந்தார்

யாராவது மனிதர்கள் காணாமல் போனால் போலீசாருக்கு புகார் செய்வது இயல்புதான். ஆனால் விலங்கு ஆர்வலர் ஒருவர் தான் அன்போடு வளர்த்து வந்த பூனை காணாமல் போய்விட்டது என்று போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளவில்லை. அந்த நேரத்தில் ஒரு முக்கியமான முடிவு எடுத்தார். தான் வளர்த்த பூனையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

ஜிஞ்சர் என்ற அந்தப் பூனையை மிகவும் அன்போடு வளர்த்து வந்தார் செரினா. கொரோனா பின்னணியில் பூனைக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று ஜூப்ளி ஹில்ஸ் பெட் கிளினிகிற்கு ஜூன் 17ஆம் தேதி பூனையை அழைத்து வந்தார். சர்ஜரி நடந்தது.

கட்டு கட்டிய இடத்தில் வீக்கம் இருந்தால் மீண்டும் ஜூன் 23ஆம் தேதி ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் சென்றார். ட்ரீட்மெண்ட் நடக்கும்போது ஜூன் 24ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து பூனை தப்பிச் சென்று விட்டதாக மருத்துவமனை ஊழியர் அவருக்கு செய்தி அறிவித்தார். அதனால் செரீனா மருத்துவமனைக்கு சென்று அவர்களிடம் வினவிய போது அவர்களிடம் இருந்து அலட்சியமான பதில் வந்தது என்று கூறுகிறார்.

இதுகுறித்து ஜூன் 27ஆம் தேதி ராயதுர்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டும் இவர் தானாகவே களத்தில் இறங்கி ஜூப்ளிஹில்ஸ் சுற்றுப்புற பகுதிகளில் பாம்ப்லெட்களை பகிர்ந்துள்ளார். ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று கண்ணீர் விடுகிறார்.

அதனால் ஹைதராபாதில் ஏற்பாடு செய்த நிருபர் கூட்டத்தில் தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளார். என் பூனையை 20 நாட்களாகத் தேடுகின்றேன். எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
அந்த மருத்துவமனையில் டூட்டி மருத்துவரே இல்லை.

ஊழியர்கள் சரியான பயிற்சி அற்றவர்கள். பொறுப்பில்லாமல் பதிலளிக்கிறார்கள். ஜன்னல் வழியாக என் பூனை பாய்ந்து வெளியில் குதித்தோடி விட்டதாக தெரிவிக்கிறார்கள். அந்த ஜன்னல் பத்தடி உயரத்தில் உள்ளது. அது நடக்காத செயல். விலங்குகள் நல போர்டு இது குறித்து விசாரணை செய்ய வேண்டும்

என் பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் தருவேன் என்று அறிவித்துள்ளார். இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.