chandramowliswarar - 2026

கீழ்ப்பசார் சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் நாளை கும்பாபிஷேகம்!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்துக்கு முன்னதாக 3 கி.மீ தொலைவிலேயே இடப்புறமாக ஒரு சாலை பிரியும்.

இந்த திண்டிவனம்- ஆவணிப்பூர் சாலையில் உள்ளது கீழ்ப்பசார் கிராமம். இங்கு தான் அருளாட்சி செய்கிறார் அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர். அம்பிகை பச்சை நிறத்தினளாகத் திகழ்வதால் மரகதாம்பிகை என்ற திருப்பெயர் கொண்டிருக்கிறாள்.

சுக்கிரப் பரிகாரத் தலமாக விளங்க இருக்கும் இந்த ஆலயம்
பிற்காலச் சோழர்களும், விஜய நகர மன்னர்களும் கொண்டாடிய அந்த ஊரும், ஆலயமும் அப்போது யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்தன.

ஆலகாலம் உண்டு அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய பரமன் கோயிலும் மண் மூடி, மரத்தின் விழுதுகள் மூடி, சுற்றிலும் காடு மண்டி அந்த பிரமாண்ட கற்றளி காணாமல் போய் இருந்தது. அங்கு 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு துர்கை சிலையும், இரட்டை நந்தியும், உடைந்துபோன சில சிலைகளும் கிடைத்தன.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இந்நிலையில் தேவபிரச்னம் பார்த்ததில் அந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புற்று விளக்கியதும், சுக்கிரபகவான் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டார் என்பதும், அதனால் இந்தத் தலம் சுக்கிரப் பரிகாரத் தலமாகவும் திகழ்ந்தது என்றும் தெரிய வந்தது.

chandramowliswarar 1 - 2026

சுவாமி சந்நிதியுடன், அம்பிகை, வள்ளி – தெய்வானை சமேத முருகப்பெருமான், கற்பக விநாயகர், சுக்கிர பகவான், லட்சுமி குபேரர் சந்நிதிகள் உள்ளன. பௌர்ணமி பூஜைகளும், நித்ய அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை 16-ம் தேதி காலை கீழ்ப்பசார் அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர் ஆலயத்துக்குக் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending