Bharath kothra
Bharath kothra

பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் மயங்கி தனது ராணுவ ரகசியங்களை கொடுத்த ரயில்வே அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் ரயில்வே தபால் துறை அதிகாரி ஒருவர் பேஸ்புக்கில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளியிடம் மயங்கி இந்திய ராணுவ ரகசியங்களை வாட்ஸ் அப்பில் பரிமாறியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தபால்களை பிரித்து அனுப்பும் பொறுப்பில் இருப்பவர் பாரத் கோத்ரா. இவர் தனது பேஸ்புக்கில் ஒருவரிடம் பேசி பழகி வந்துள்ளார். அந்தப் பெண் போர்ட் பிளேயரில் எம்பிபிஎஸ் படிப்பதாக அவர் கூறியுள்ளார்.

நேரில் சந்தித்து பழகலாம் என வாட்ஸ்அப் வீடியோ காலில் அந்த பெண் பேசியபோது அவர் அழகில், பேச்சில் மயங்கி போன அந்த அதிகாரி தபாலில் வந்த ராணுவ தகவல் தொடர்பான ஆவணங்களை படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அவருக்கு பகிர்ந்துள்ளார்.

ராணுவத்தில் பணியாற்றும் உறவினர் ஒருவரிடம் இட மாறுதலுக்கு தேவைப்படுவதாக கூறி அந்த ஆவணங்களை அந்தப் பெண் பெற்றதாக கூறப்படுகின்றது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இந்நிலையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரும், ராஜஸ்தான் மாநில உளவுப் பிரிவினரும் இணைந்து அவரை கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகு அந்தப் பெண் பாகிஸ்தான் உளவாளி என்பது தெரியவந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending