ஐபிஎல்: இறுதிப் போட்டியில் சென்னை வெற்றி!

ipl csk
ipl csk

ஐபிஎல்: இறுதிப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி!

சுருக்கமான ஸ்கோர்:
சென்னை அணி: 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 192
கோல்கட்ட அணி: 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165

~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை கொல்கத்தா அணியை வென்றது.

நேற்று துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின. புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பெற்றிருந்த டெல்லி அணியும் சென்னை அணியும் முதல் குவாலிபயர் போட்டியில் போட்டியிட்டன. அந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. முதல் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியும் கொல்கத்தா அணியும் போட்டியிட்டன. அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அதனால் டெல்லி அணியோடு இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணி போட்டியிட்டது. அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியுடன் இறுதிப் போட்டியில் சென்னை அணி விளையாடியது.

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை இரண்டு முறை சந்தித்து இருக்கிறது. அந்த இரண்டு முறையும் சென்னை அணி கொல்கத்தா அணியை வென்றிருக்கிறது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்றிருந்த அணிகளை தவிர ஒரு மூன்றாவது அணி கோப்பையை வென்றது என்பதான சரித்திரம் ஒரே ஒருமுறைதான் இருந்திருக்கிறது. சன் ரைசர்ஸ் அணி ஒரு முறை இதைப்போல வென்றிருக்கிறது. மற்ற அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகளில் ஏதாவது ஒன்று கோப்பையை பெற்றதாக வரலாறு. அந்த வகையில் இந்த கோப்பையை சென்னை அணிதான் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

டாஸ் வென்று சென்னை அணியை முதலில் மட்டையாட கொல்கத்தா அணி வேண்டிக்கொண்டது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களான ரித்துராஜ் ட்யு பிளேசிஸ் விளையாட வந்தனர். இருவரும் மிக அருமையாக விளையாடினர். ரித்துராஜ் முப்பத்தி இரண்டு ரன்களோடு 9 ஆவது ஓவரில் அவுட் ஆனார். அதன் பின்னர் விளையாட வந்த ராபின் உத்தப்பா மொயின் அலி ஆகிய இருவரும் தடாலடியாக ஆடி அணியின் ஸ்கோரை 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் என்ற அளவிற்கு உயர்த்தினர். ட்யு பிளேசிஸ் மற்றொரு பக்கத்தில் 7 ஃபோர்
3 சிக்சர்களுடன் 86 ரன் எடுத்தார். இது ஒரு வலுவான ஸ்கோர். இந்த ஸ்கோரை எட்டுவதற்கு கொல்கத்தா அணி மிகச் சிறப்பாக ஆட வேண்டும்.

இந்நிலையில் கொல்கத்தா அணி இரண்டாவது இன்னிங்சை விளையாட வந்தது. அதனுடைய தொடக்க ஆட்டக்காரர்கள் கில், வெங்கடேச ஐயர் இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். வெங்கடேச ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் இருந்தபோது முதல் பந்திலேயே தோனிக்கு ஒரு கேட்ச் கொடுத்தார். ஆனால் தோனி அதை விட்டுவிட்டார். இரண்டாவது முறையும் அதே போல ஒரு காட்சி ஒன்று விடப்பட்டது. இதையெல்லாம் பார்த்தபோது சென்னை அணியின் ஆட்டம் சரியாக இல்லை, கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று தான் அனைவரும் நினைத்திருப்பார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
ipl chennai
ipl chennai

ஆனால் ஆட்டம் திடீரென மாறியது. முதலில் வெங்கடேஷ் ஐயர் அவுட்டாக அதன் பின்னரான சுனில், ரணா, நரேன்,
மோர்கன், தினேஷ் கார்த்திக் என்று வரிசையாக கொல்கத்தா அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால் 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து தோற்றுப்போனது.

ஆட்டநாயகனாக டுப்லஸ்ஸிஸ் விருது பெற்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நல்ல முறையில் விளையாடி இதற்கான விருதினை பெற்றது. ரவி பிஷ்னாய் சிறந்த கேட்ச் பிடிப்பதற்கான விருதினை பெற்றார்.

புதிதாக வந்து விளையாடி வரும் வீரர் என்ற விருதினை பெற்றார் ரிதிதுராஜ். சிறந்த விளையாட்டினை திடீரென மாற்றிய ஒரு வீரர் என்பதற்கான விருதினை ஹர்ஷல் படெல் பெற்றார். அவர் இந்த சீசனில் 32 விக்கெட்டுகள் சாய்த்து இருக்கிறார். அதனால் அவர் சிறந்த பவுலர் விருதினை பெற்றார். ரித்துராஜ் 635 ரன்கள் மொத்தமாக அடித்து இருப்பதால் இந்த ஐபிஎல் 2021 சிறந்த பேட்ஸ்மேன் விருதையும் பெற்றார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

ஒரு வழியாக ஐபிஎல் இரண்டு பகுதியாக நடைபெற்றிருந்த போதும் நேற்று முடிவுக்கு வந்தது. சென்னை அணி மீண்டும் சாம்பியன் ஆனது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories