ஊசி போடாதவருக்கு போட்டதாய் வந்த SMS!

இந்தியா சற்றுமுன்
vaccine - 2026

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத இளைஞருக்கு 2 டேஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டதாக குறுந்தகவல் வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் அவ்சா தாலுகா ஜவல்கா கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அந்த இளைஞருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றபோது இரண்டு தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அருகிலுள்ள தடுப்பூசி மையத்தைத் தொடர்புகொண்டபோது அங்கிருந்தவர்கள் புதன்கிழமை தடுப்பூசி முகாமே நடத்த வில்லை என்று கூறியுள்ளனர்.

பின்னர் இது குறித்து அவ்சா மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அன்காத் ஜாதவிடம் கேட்டபோது கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் தவறாக செல்போன் எண்ணை பதிவு செய்திருந்தால் இது போல் நடந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.