அந்தரத்தில் பறந்து சாலையைக் கடந்த மான்! வைரல்!

Published:

deer 1 - 2026

இந்திய வனத்துறை அதிகாரியான சுரேந்தர் மெஹார் விலங்குகள் செய்யும் சுட்டித்தனமான செயல்களை வீடியோ எடுத்து சமூக வலைதளமான டிவிட்டரில் அவ்வபோது பதிவிடுவார்.

அது போல நேற்றைய தினம் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில், மான் ஒன்று சிறிய சாலையை மிக உயரத்தில் தாவிக் கடந்து உள்ளது.

அதனை பார்க்கும் போது மான் தாவுவது போன்று தெரியவில்லை. பறப்பது போன்றே தெரிவதாக பார்வையாளர்கள் ஷாக் ரியாக்சனோடு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெறும் 22 வினாடிகளே உள்ள இந்த விடியோவை 12 ஆயிரத்திற்கு அதிகமானோர் கண்டு ரசித்து உள்ளனர்.

அந்த வீடியோவில் சுரேந்தர் மெஹார் குறிப்பிட்டு உள்ளதாவது, ‘உயிர் வாழ்வது கூட சில சமயங்களில் தைரியமானதாகும். (Sometimes even to live is an act of courage) என்று எழுத்தாளர் லூசியஸ் அன்னியஸ் செனெகா -வின் வாக்கியத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img