
இளம் வயதுள்ள சிறுகுழந்தைகள் செய்யும் செல்லசேட்டைகளுக்கு அளவே கிடையாது. அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நமது மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அந்த வகையில், சீனாவில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவரும் வீடியோ ஒன்றில், சிறுவன் தனது தோழிக்கு ரோஜா பூவை பரிசாக அளிக்க முயற்சிக்கிறார். ஆனால், அவர் சிறுவனின் பரிசை ஏற்றுக்கொள்ளவில்லை.
இரண்டு முறை ரோஜாவை நீட்டிய சிறுவன், தோழியின் தாயாருக்கு அதனை கொடுக்க முயற்சிக்கிறார். இதனால் அங்கு பெரும் நகைச்சுவை சூழலே உருவானது. கள்ளக்கப்படமற்ற மனத்துடைய குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மகிழ்ச்சிதான் கிடைக்கிறது.