இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்து இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (53) மரணமடைந்தார்.
பிரபல பாலிவுட் பாடகர் கேகே செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தாவில் காலமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு வயது 53, அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் நேற்று இரவு தெற்கு கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சாவில் ஒரு கல்லூரி ஏற்பாடு செய்திருந்த கச்சேரியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஃபர்ப்பாம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அசௌகரியமாக உணர்ந்த கேகே தனது மைக்கை அருகில் உள்ளவரிடம் கொடுத்துவிட்டு மேடையின் பின்பக்கமாக கைத்தாங்கலாக அழைத்து செல்லப்படுகிறார். பின்னர் ஹோட்டலுக்கு சென்ற அவர் மாடிப்படிகளில் மயக்கமுற்று விழுந்ததை அடுத்து கொல்கத்தா சிஎம்ஆர்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கொல்கத்தா விமான நிலையத்தில் கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படவுள்ளது. கொல்கத்தா, பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (53), கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மூன்றாம்தலைமுறை பாடகராக ரசிகர்களை ஈர்த்து வந்த கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், 90களின் பிற்பகுதியில் பிரபல பாடகராக வலம் வந்தவர். இவர்தமிழில் விஜய்,அஜித், பிரபு தேவா உள்ளிட்டோரின் 90ஸ் ஹிட்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர். ஸ்ட்ராபெரி கண்ணே , உயிரே உயிரே’ போன்ற பாடல்களுக்குப் பெயர் பெற்றவர். கேகே ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.
இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்படும் என மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் இன்று மதியம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. கொல்கத்தா விமான நிலையத்தில் அவருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மந்திரி மம்தா பானர்ஜி தற்போது கொல்கத்தாவில் இல்லை. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் வேறு இடத்துக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கால நிலை விமானம் பறப்பதற்கு ஏதுவாக இருந்தால் நானும் விமான நிலையத்தில் அரசு மரியாதை வழங்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.
இவரது மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது மரணத்திற்கு பல்வேறு விஷயங்கள் காரணம் என குற்றசாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அரங்கத்தில் நிரம்பி வழிந்த கூட்டம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கேகே இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் மொத்தமாக 3 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டும்தான் இருக்க முடியும். ஆனால் அவரது நிகழ்ச்சி நடைபெற்ற போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாக கூறப்படுகிறது. கட்டுக்கடங்காத கூட்டத்தை களைப்பதற்காக தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரங்கத்தில் அதிக வெப்பம் நிலவியுள்ளது. இதனால் கேகே-வுக்கு அசௌகிரியம் ஏற்பட்டகாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அரங்கத்தில் ஏசி வேலை செய்யவில்லை. இது போன்ற பல குற்றசாட்டுகள் எழுந்துள்ளதால் அந்த கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைப்பதற்காக தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.