PM Modi 1 - 2026

தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியா Featured பொது தகவல்கள்
PM Modi 1 - 2026
  • செல்வ நாயகம்

தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் (Cabinet approves Computerization of Primary Agriculture Credit Societies – PACS)

கேள்வி: இது என்ன?

பதில்: உள்துறை & கோஆப்பரேட்டிவ் அமைச்சர் அமித் ஷா – கோஆப்பரேட்டிவ்களை வெளிப்படை தன்மையுடன் செயல்பட வைக்க – கொண்டு வந்திருக்கும் கணினிமயமாக்கல் திட்டம்!

கேள்வி: அமித் பாய்??? ஓ! இதன் பலன்?

பதில்: ‘தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’

கேள்வி: அப்படீன்னா?

பதில்: அனைத்தும் கணினி மயம். இனி திருட முடியாது. விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்தையும் ஆதாரோடு இணைப்பார்கள். குருமாக்களும் ஊப்பீகளும் நில ஆக்கிரமிப்பு செய்வது இயலாது. வங்கி கணக்குகளும் இணைக்கப்படும். இது வரை ஆளும் கட்சிக்காரர்களுக்கு மட்டும் பயன்பட்டு வந்த கோஆப்பரேட்டிவ் அமைப்பு, பொது மக்கள் பயனுக்கு வரும். ஏற்கனவே கோஆப்பரேட்டிவ் வங்கிகளை ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் கொண்டு வந்தது நினைவிருக்கும். (கோஆப்பரேட்டிவ் திருட்டு பற்றி சுபி தளபதி ஜியிடம் கேட்கவும்).

கூடுதல் தகவல்: நாட்டில் உள்ள 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை 5 ஆண்டுகளுக்குள் கணினி மயமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 1528 கோடி ரூபாய் ஆகும். இந்த கடன் சங்கங்கள் மூலம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் உள்பட 13 கோடி விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837947

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் வர்த்தக நடவடிக்கைகளையும் பல்வேறு சேவைகளையும் மேற்கொள்வதற்கு இதுவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை 5 ஆண்டுகளுக்குள் கணினி மயமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 1528 கோடி ரூபாய் ஆகும். இந்த கடன் சங்கங்கள் மூலம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் உள்பட 13 கோடி விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Cabinet approves Computerization of Primary Agriculture Credit Societies (PACS)

63,000 functional PACS will be computerized with overall budget outlay of Rs 2516 crore

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837890

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.