டெல்லியில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து எனப்படும் 72 மணிநேர போராட்டம்..

500x300 835748 untitled 6 - 2026

டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று விவசாயிகள் மகா பஞ்சாயத்து எனப்படும் 72 மணிநேர போராட்டத்தை துவங்கிய நிலையில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் எல்லைகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று விவசாயிகள் மகா பஞ்சாயத்து எனப்படும் 72 மணிநேர போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்திருந்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு இந்த போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி வரத் தொடங்கினார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் இந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதற்காக அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் தடுப்பு வேலிகளை அடைத்து மூடினார்கள்.

மேலும் டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் எல்லைகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளரும், சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் தியாகத் நேற்று ஜந்தர் மந்தர் சென்றபோது அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் அவர் போராட்டத்தில் பங்கேற்காமல் திரும்பி சென்றார். இந்தநிலையில் திட்டமிட்டபடி டெல்லியில் இன்று காலை முதல் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பி தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், ‘விவசாய விலை பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும். விவசாயி கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும். மின்சார சட்டத்தை செயல்படுத்தக் கூடாது’ என்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.டெல்லி புறநகர் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லைகளான சிங்கு, காசிப்பூர் உள்ளிட்ட பகுதி களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி தலைநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து விவசாயிகளை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories