கத்தோலிக்க பாதிரி ஆண்டனி பெர்னாண்டஸ் தாய் மதம் திரும்பினார். கோவா கத்தோலிக்க கிறிஸ்தவர் இவர்.
400 வருட கத்தோலிக்கக் குடும்பப் பின்னணி கொண்டவர். கத்தோலிக்க சர்ச்-சில் பாதிரியாக இருந்த ஃபாதர் ஆண்டனி ஃபர்னான்டஸ், மிகப் பழைமையான ஹிந்து நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீராம கிருஷ்ணர் கோயிலில் நடந்த பொது நிகழ்ச்சியில் சனாதன தர்மப் பாதைக்குத் திரும்பினார்.
இது குறித்து அவர் குறிப்பிட்டபோது, எனது வாழ்வில் மிக்க மகிழ்ச்சி தரும் நாள் இன்று. இனி மேல் எனக்கு எந்த சர்ச்சுடனும் தொடர்பு ஏதும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை பேராசிரியர் பி.ஏ.வர்கீஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர், ஹிந்துவாக மதம் மாறிய பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து ஒரு பட்டியலும் கொடுத்துள்ளார்.