பிரதமர் நரேந்திர மோடி தான் பெற்ற பரிசுப் பொருள்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் பெறும் தொகையினை கங்கை நதி தூய்மைப் படுத்தும் இயக்கத்துக்கு சேர்த்துக் கொள்ள விரும்பினார். இதன்படி குஜராத் மாநிலம் சூரத்தில் ஏலம் நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக மோடி பயன்படுத்திய அவர் பெயர் கொண்ட கோட் சூட், ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது. இதனிடையே இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஏலத்தை நல்லமுறையில் நடத்தியவர்களுக்கும் பாராட்டையும் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் மோடி. இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி:
I congratulate & appreciate all those who participated & contributed in the auction in Surat & made it a success. — Narendra Modi (@narendramodi) February 20, 2015