images 7 - 2026

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்..

இந்தியா பொது தகவல்கள்
images 7 - 2026

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.

இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

ஏற்கனவே உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஞாயிற்றுக்கிழமை உணரப்பட்டதாகவும் முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து இரண்டு லேசான அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக மாவட்டப் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.