சன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா..?! சுடாமலா இருக்கும்?! கலாநிதி அதிர்ச்சி! கழற்றிவிடப்பட்ட ‘தலைகள்’!

அடடே... அப்படியா? புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
sun news meme department sacked1 - 2026

திமுக தலைவரும், தனது தாய்மாமனுமான ஸ்டாலி்ன் குறித்த மீம்ஸ், அதுவும் ‘சுடலை’ என்ற பெயர் அப்படியே சன் நியூஸில் வெளியானதைக் கண்டு அரண்டு போன மாறன் சகோதரர்கள், சன் நியூஸ் தலைமை செய்தி ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளனர் என்பது ‘இன்றைய செய்தி’! இதுவே கருத்துச் சுதந்திரத்தின் இமயம் போன்ற நடவடிக்கை என்பது ‘நாளைய வரலாறு’!

கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட ஏராளமானோர் அரசியலிலும், மீடியாக்களிலும் ஆதிக்கம் செய்து வருவது ‘உலகறிந்த ரகசியம்’. கட்சிக்காகவே ஊடகங்களை நடத்தும் திராவிட அரசியல், ஊடக சுதந்திரம். அவர்கள் நடத்தும் டிவி சேனலில், எதிர்க் கட்சிகளையும், குறிப்பாக மோடி, எடப்பாடி ஆகியோரை மட்டுமே விமர்சனம் செய்வது அவர்களின் கருத்துச் சுதந்திரம்..

இந்நிலையில், கொரோனா குறித்த தற்போதைய சன் நியூஸின் பீதி்க்குள்ளாக்கும் பகீர் திகில் பிளாஷ் பிரேக்கிங் செய்திகளுக்கு இடையே அவ்வப்போது வைரல் வீடியோக்களையும், வைரலான மீம்ஸ்களையும் வெளியிட்டு பார்வையாளர்களை அதிகரிக்க வைத்து, டிஆர்பி., க்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். தற்போது வடிவேலு குறித்த படங்களுடன் வெளியாகும் மீம்ஸ்கள்தான் தமிழக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பதால், அப்படி ஒரு மீம்ஸ் தற்போது வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இன்றைய கொரோனா சூழலில், வீட்டுக்குள் இருங்கள். கொரோனா பரவலில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து பத்திரமாக இருங்கள் என்று பிரசாரம் செய்து, குடும்பத்துக்கு ரூ. 1000 உதவித் தொகையும் கொடுத்து, ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, பருப்பு வகைகளையும் அளித்து வருகிறது தமிழக அரசு.

ஆனால் அதேநேரம், திமுக., தலைவர் ஸ்டாலினோ, வீட்டை விட்டு வெளியே வந்து கொரோனா தொற்றிக் கொண்டு, அவதிப்பட்டு, அதன் மூலம் செத்தால் , அந்தக் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார். அவரது பேச்சும் கருத்தும் எண்ணமும், கொரோனாவால் மக்கள் உயிரிழந்துவிடக் கூடாது என்று அனைத்து விதங்களிலும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளின் அர்ப்பணிப்பு உணர்வுடனான செயல்பாடுகளுக்கு எதிரானதாகவே மக்களால் பார்க்கப் பட்டது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்!
sun news meme department sacked - 2026

இதை அடுத்து, இரு தினங்களுக்கு முன் வெளியான ஒரு மீம்ஸில், வீட்டுக்குள்ளே இருடான்னு சொல்லி 1000 ரூபாய் கொடுத்தா, ஏண்டா வெளியே வந்த என்று வடிவேலுவை எடப்பாடி கேட்க, அதற்கு வடிவேலு, கொரனா வந்து செத்தா ஒரு கோடி கொடுக்கனும்னு நம்ம சுடல (ஸ்டாலின்) சொன்னாரு, அதான் வந்தேன்னு பதில் சொல்லுவார். இந்த மீம்ஸ் ஸ்டாலினின் விவரங்கெட்ட அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால் சமூகத் தளங்களில் வைரலான இந்த மீம்ஸை சன் நியூஸும் எடுத்து தனது செய்தியில் கையாண்டுள்ளது.

இந்த மீம்ஸை, சன் நியூஸில் இன்று காலை ஒளிபரப்பியுள்ளார்கள். என்ன நினைத்துக் கொண்டு ஆசிரியர் குழு இதனை ஒளிபரப்பினார்கள் என்பது, அந்தக் குழுவினருக்கே தெரியும்! ஆனால், இந்த மீம்ஸில் சுடல என்று சொல்வது ஸ்டாலினைக் குறிக்கிறது என்பதாலும், சன் நியஸிலேயே இது ஒளிபரப்பானதாலும், உடன் பிறப்புகள் கொதித்து எழுந்துள்ளனர்.

madurai dinakaran office set fire

உடனடியாக, இந்த விசயம் மாறன் சகோதரர்களுக்கு தெரிந்ததும், அவர்கள் அரண்டுபோய் விட்டார்களாம். ஏற்கெனவே தனது பெரிய மாமா மு.க. அழகிரி குறித்து தினகரனில் வெளியான கருத்தால் குடும்பமே இரண்டாகிப் போனது. 3 பத்திரிக்கையாளர்கள் தீவைத்து எரிக்கப்பட்டார்கள்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

அந்தக் கருத்துச் சுதந்திரத்தின் காயமும் ஈரமும் இன்னமும் காய்ந்து விடாத நிலையில், அடுத்த கருத்துச் சுதந்திரத்தை தமிழகம் பார்க்கப் போகிறதே என்ற அச்சமும் கவலையும் மாறன் சகோதரர்களை ஆட்கொண்டுவிட்டதாம்! நாம் நடத்தும் டிவியிலேயே மீண்டும் இந்த கண்றாவியா என அரண்டு போனார்களாம்.

இந்நிலையில், சன் நியூஸின் தலைமை செய்தி ஆசிரியர் ராஜா, மீம்ஸ் ஹெட் சிவகுமார், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கலை, யோகா ஆகிய 4 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளதாம் மாறன் நிர்வாகம். இதனை தனது சமூகத் தளத்தில் பகிர்ந்துள்ள ராஜா, தனது 30 வருட பணி சன் டிவி.,யில் முடிவுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் மு.க.ஸ்டாலின், தனது முரசொலியில் என்ன செய்கிறார்?! எல்லோருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சித்து வருகிறார். தேர்தல் நேரத்தில் மோடியை களவாணின்னு சொன்னது கருத்துச் சுதந்திரமா, கிருஷ்ண பகவான் மீது ஈவ் டீசிங் கேஸ் போடனும்னு ஓசி சோறு வீரமணி சொன்னதை முரசொலியில் வெளியிட வில்லையா, மோடியையும், எடப்பாடியையும் பிச்சைக்காரர்கள் என தயாநிதி மாறன் சொன்னது கருத்துச் சுதந்திரம் இல்லையா என்று சமூக வலைத்தளங்களில் இப்போது வெச்சு செய்து வருகிறார்கள்!

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

நேற்று தான் இதே போன்ற ஒரு கருத்துச் சுதந்திர தகராறில் மு.க.ஸ்டாலும் திமுக.,வும் சிக்கிக்கொண்டு, உலகத்துக்கு தங்கள் கருத்துச் சுதந்திரத்தின் முகக் கவசத்தை நீக்காமல் காட்சி கொடுத்து விளக்கினார்கள். தினத்தந்தியில் கார்ட்டூனிஸ் மதி வரைந்த கார்ட்டூன், அண்ணாத்துரையை கேவலப் படுத்துவதாக கொதித்தெழுந்து, தினத்தந்தி நிர்வாகத்தை அரட்டி உருட்டி மிரட்டி அடிபணிய வைத்தார் ஸ்டாலின். இதனால் இன்று முதல் மதி கார்ட்டூன் தினத்தந்தியில் இல்லை என்றானது.

திமுக.,வின் இந்தக் கருத்துச் சுதந்திர காமெடியில் சிக்கி, இத்தனை நாட்கள் பல்லக்கு தூக்கிய பத்திரிகையாளர்களே தூர வீசி எறியப் பட்டது, அதுவும் கொரோனா நேரத்தின் இவ்வாறு நடைபெற்றது தமிழக பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது! சர்வாதிகாரி ஸ்டாலினின் அவலத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

  • சதானந்தன், சென்னை..

3 thoughts on “சன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா..?! சுடாமலா இருக்கும்?! கலாநிதி அதிர்ச்சி! கழற்றிவிடப்பட்ட ‘தலைகள்’!

  1. நான் எந்த கட்சியும் சாராதவன். ஆனால் இது முட்டாள்தனமான வாதம். ரோட்டிலே போகும் ஒருவன் இந்த செய்தியாளர் சதானந்தனை கெட்ட வார்த்தையால் திட்ட.. அதை கேட்கும் அவ்ரது மனைவியோ மகனோ அதே வார்த்தையை சொல்லி காட்டிவிட்டு ‘இது கருத்து சுதந்திரம்’ என பேசலாமா? ஜர்னலிசம் சுவாரஸ்மாக எழுதப்பட வேண்டுமே தவிர குதர்க்கமாக அல்ல!

  2. 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் மேடைகளில் சில மூன்றாம் தர பேச்சாளரகளால் அசிங்கமாக பேசப்பட்டுவந்தன ஆனால் தற்சமயம் யூட்யூப் மீம் மேக்கர்களால் எல்லை மீறிய நக்கல் நையாண்டிகள் தான் உள்ளது எனவே சற்று நாசுக்காக விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும்

  3. சுடலை ன்னா என்ன?. சுடலையா இல்லை சுட்டாரா? ஏன் சுடலை…. எங்கே சுட்டார்??? எப்போ சுடலை, எப்படி சுட்டார?. தயவுசெய்து விளக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.