வீட்லே செய்யுங்க அருமையான கேக்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
rice noodle 1 - 2026

ரைஸ் நூடுல்ஸ் பான்கேக்
தேவையான பொருட்கள் :

ரைஸ் நூடுல்ஸ் – 1 கப்
வாழைப்பழம் – 2 பெரியது
முட்டை – 2
பால் – கால் கப்
பேரீச்சம் பழம் – கால் கப்
நட்ஸ் – கால் கப்
சர்க்கரை – சுவைக்கு
ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
வெண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

cake 1 - 2026

பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.

நட்ஸ், பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாழைப்பழத்தை வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் ரைஸ் நூடுல்ஸ்( உடைத்து போடவும்)போட்டு அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். நூடுல்ஸ் நன்கு மென்மையாகும் வரை வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் முட்டை, பால், சர்க்கரை, ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து அதில் நூடுல்ஸ், பொடியாக நறுக்கிய நட்ஸ், பேரீச்சம்பழம், வாழைப்பழம் போட்டு நன்றாக கலக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நூடுல்ஸ் கலவையை ஒரு கரண்டி கனமான அளவில் விட்டு சுற்றி வெண்ணெய் விடவும். வெந்ததும் திருப்பி போட்டு மறுபடியும் சுற்றி வெண்ணெய் விடவும். தோசை கரண்டியால் நன்றாக அழுத்தி விடவும்.

வெந்ததும் எடுத்து ஏலக்காய் நசுக்கி போட்ட தேங்காய் பாலுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.