spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுநரம்பு தளர்ச்சிக்கு... சீரகம் தரும் சீரான ஆரோக்கியம்!

நரம்பு தளர்ச்சிக்கு… சீரகம் தரும் சீரான ஆரோக்கியம்!

- Advertisement -

சீரகத்தின் சில நன்மைகள்:

மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.

சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப்பொருமல் வற்றி நலம் பயக்கும்.

சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.

மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சீரகம் செல்லிறப்பை தடுத்து முதுமையை தடுக்கிறது. முக்கியமாய் நரை முடியை தடுக்கும். நல்ல சருமத்தை தரும். சுருக்கங்களின்றி இளமையான சருமத்தை தரும்.

குளிர்காலத்தில் சுவாசப்பாதையில் மற்றும் நுரையீரலில் உண்டாகும் தொற்றை எதிர்த்து போராடும். சுவாசத்தை சீராக்கும். கல்லீரலில் படியும் அதிகபடியான நச்சை வெளியேற்றும். இதனால் கல்லீரலின் வேலை குறைவதோடு அதன் ஆரோக்கியமும் அதிகமாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe