செங்கல்பட்டு அருகே ஆட்டோ மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்களாம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர்திரும்பிக் கொண்டிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தீவனூர் பகுதியில் ஆட்டோ சென்றுக்கொண்டிருந்த போது திண்டிவனத்தில் திருவண்ணாமலைக்கு தார் ஏற்றிச்சென்ற லாரியின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது .
இதில் ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஆட்டோவில் பயனம் செய்த செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமரகுரு அவரது மனைவி மஞ்சுளா.
மகன் விஜயன் மற்றும் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த குருமூர்த்தி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ரோசனை காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக திண்டிவனம் – திருவண்ணாமலை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




