ஐ.பி.எல் 2023 – நான்காம் நாள் – 03.04.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஐ.பி.எல் 2023 தொடரின் நான்காம் நாளான நேற்று சென்னை ராஜஸ்தான் அணிகளுக்கிடையே சென்னையில் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி வென்றது. சென்னை அணி (217/7, ருதுராஜ் கெய்க்வாட் 57, கான்வே 47, ஷிவம் டூபே 27, அம்பாதி ராயடு 27, மொயின் அலி 19, தோனி 12, மார்க் வுட் 3/49, ரவி பிஷ்னோய் 3/28) ராஜஸ்தான் அணியை (205/7, கைல் மேயர்ஸ் 53, நிக்கோலஸ் பூரன் 32, பதோனி 23, ஸ்டோயினிஸ் 21, ராகுல் 20, மொயின் அலி 4/26) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ், கான்வே ஜோடி அபாரமாக விளையாடியது. கெய்க்வாட் லக்னோ பந்துவீச்சை சிதற அடிக்க, 25 பந்துகளில் அரைசதம் எடுத்தார். கான்வேவும் சிக்சர்களை பறக்கவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் இந்த ஜோடி 79 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய சிவம் துபே முதலில் மெதுவாக விளையாடினாலும், பிறகு அதிரடியாக 3 சிக்சர்களை அடிக்க 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். மொயின் அலி தன் பங்கிற்கு 19 ரன்கள் சேர்க்க, அம்பாதி ராயுடு தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். இறுதியில் தோனி 2 சிக்சர்களை பறக்கவிட, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் சேர்த்தது.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் கைல் மெயர்ஸ் ரூத்ரதாண்டவம் ஆடினார். சிஎஸ்கே வேகப்பந்துவீச்சை மெயர்ஸ் சிக்சரும், பவுண்டரியாகவும் அடிக்க லக்னோ அணி, இன்றைய ஆட்டத்தில் எளிதில் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. பவர்ப்ளே ஓவர்களில் லக்னோ அணி 80 ரன்கள் அடித்தது. எனவே சென்னையின் அணித்தலைவர் தோனி உடனடியாக சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த தொடங்கினார். இதன் மூலம் பெருக்கெடுத்து ஓடிய ரன் வெள்ளம் தடுக்கப்பட்டது. ஸ்பின்னர் பந்துகளை தூக்கி அடித்து லக்னோ வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரான் ஜோடி மீண்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதனால் மீண்டும் லக்னோ வெற்றி பாதைக்கு திரும்பியது. அப்போது மோயின் அலி மீண்டும் பந்துவீச்சில் ஸ்டோனிஸ் விக்கெட்டை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து நிக்கோலஸ் பூரான் சிக்சர்களை பறக்கவிட மீண்டும் போட்டியில் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் முதல் ஓவரில் ரன்களை வாரி கொடுத்த தேஷ்பாண்டே, அதன் பிறகு கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.
இதற்கு பலனாக தேஷ்பாண்டே, நிக்கோலஸ் பூரான் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் பிறகு ஆட்டம் சிஎஸ்கேவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதனையடுத்து கடைசி ஓவரில் 28 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால், கடைசி ஓவரில் சிஎஸ்கே பெனால்டி விதிக்கப்பட்டது. எனினும் கடைசி 2 பந்தில் 10 ரன்களை சிஎஸ்கே விட்டு கொடுத்தும், சிஎஸ்கே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.