காஷ்மீர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் முஃப்தி முகமது சயீத்

இந்தியா

mufti-mohammed-syed பாஜக., கூட்டணியுடன் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக முஃப்தி முகமது சயீது ஞாயிற்றுக்கிழமை இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். இதையொட்டி, விழா நடைபெறும் ஜம்முவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜோராவர் சிங் அரங்கில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் உத்தம் சந்த் கூறியபோது, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க ஜம்மு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெற உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். பதவியேற்பு விழாவின்போது, பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த நிர்மல் சிங் பதவியேற்பார் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.