ராம் மாதவ் இலங்கை பயணம்

இந்தியா

ram madhavபிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 13ம் தேதி இலங்கைக்குச் செல்லவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக, ராம் மாதவ் இலங்கை செல்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பாஜகவுக்கு கடந்த வருடம் வந்த ராம் மாதவ், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, இலங்கையில் இந்திய மீனவர்கள் கைதாகி படும் பிரச்னைகள் இவற்றில் ஆர்.எஸ்.எஸ். பின்புலக் கருத்துகளை முன்வைத்துள்ளார். எனவே, பிரதமரின் இந்த இலங்கை பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய அவர் அனுப்பப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது. ஏற்கெனவே மோடியின் நியூசிலாந்து பயணத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தவர் ராம் மாதவ் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.