ipl 2024 - 2026

IPL 2024: சன் ரைசர்ஸ் அணியின் த்ரில் வெற்றி!

இந்தியா சற்றுமுன் விளையாட்டு
ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பத்தொன்பதாம் நாள்
ஐபிஎல் 2024 – 09.04.2024 – முல்லன்பூர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ்

          சன்ரைசர்ஸ் அணி (182/9, நிதீஷ் குமார் ரெட்டி 64, அப்துல் சமது 25, ட்ரவிஸ் ஹெட் 21, அர்ஷ்தீப் சிங் 4/29, சம் கரன் 2/41, ஹர்ஷல் படேல் 2/30) பஞ்சாப் அணியை (180/6, ஷஷாங்க் சிங்க் 46*, அஷுதோஸ் ஷர்மா 33*, சாம் கரண் 29, சிகந்தர் ராசா 28, புவனேஷ்வர் குமார் 2/32) 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. பவர்பிளே ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்தது. ட்ராவிஸ் ஹெட் (21 ரன்), அபிஷேக் ஷர்மா (16 ரன்), மர்க்ரம் (பூஜ்யம்), கிளாசன் (9 ரன்), ராகுல் திரிபாதி (11 ரன்) கம்மின்ஸ் (3 ரன்), புவனேஷ் குமார் (6 ரன்) ஆகியோர் சரியாக விளையாடவில்லை.

20 வயதான நிதீஷ் குமார் ரெட்டி பஞ்சாப் அணிக்காக இன்று சிறப்பாக ஆடினார். அவர் 37 பந்துகளில் 64 ரன் அடித்தார். அதில் 4 ஃபோர் மற்றும் 5 சிக்சர்கள் அடக்கம். அவருக்கு உறுதுணையாக அப்துல் சமத் (12 பந்துகளில் 25 ரன்) மற்றும் ஷபாஸ் அகமது 7 பந்துகளில் 14 ரன்) ஆடினர். 20 ஓவர் முடிவில், ஹைதராபாத் அணி 9 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது.

          183 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணி மோசமாகத் தொடங்கியது. ஜானி பெயர்ஸ்டோ (பூஜ்யம் ரன்), பிரப்சிம்ரன் சிங் (4 ரன்), ஷிகர் தவான் (14 ரன்) ஆகிய மூவரும் 4.4 ஓவருக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஆடவந்த சாம் கரன் (22 பந்துகளில் 29 ரன்), சிக்கந்தர் ராசா (22 பந்துகளில் 28 ரன்) இருவரும் பஞ்சாப் அணியின் ஆட்டத்தை சற்று நிலைப்படுத்தினர்.

அவர்களுக்குப் பின் வந்த ஷஷாங்க் சிங் (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 46 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (11 பந்துகளில் 19 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (15 பந்துகளில் 33 ரன்) வெற்றிக்கு முயற்சி செய்தனர். இருப்பினும் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 180 ரன் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.   

          சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிதீஷ் குமார் ரெட்டி தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.  

அணிஆவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்44081.120
கொல்கொத்தா43161.528
லக்னோ43160.775
சென்னை53260.666
ஹைதராபாத்53260.344
பஞ்சாப்5234-0.196
குஜராத்5234-0.797
மும்பை4132-0.704
பெங்களூரு5142-0.843
டெல்லி5142-1.370
      

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.