- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இருபத்தைந்தாம் நாள்
ஐபிஎல் 2024 – 15.04.2024
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சன்ரைசர்ஸ் அணி (287/7, ட்ராவிஸ் ஹெட் 102, கிளாசன் 67, அப்துல் சமத் 37, அபிஷேக் ஷர்மா 34, ஐடென் மர்க்ரம் 32, ஃபெர்கூசன் 2/52) பெங்களூரு அணியை (262/7, தினேஷ் கார்த்திக் 83, ட்யு பிளேசிஸ் 62, கோலி 42, அனுஜ் ராவத் 25*, பேட் கம்மின்ஸ் 3/43, மயக் மர்கண்டே 2/46) 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று நாளை பெங்களூருவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியில் இன்று முதல் ஐந்து வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடினர்.
அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (22 பந்தில் 34 ரன்), ட்ரவிஸ் ஹெட் (41 பந்துகளில் 102 ரன், 9 ஃபோர், 8 சிக்சர்), ஹென்றிச் கிளாசன் (31பந்துகளில் 67 ரன்), மர்க்ரம் (32 ரன்), அப்துல் சமது (37 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 287 ரன் எடுத்தது.
288 ரன் என்ற கடினமான இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (20 பந்துகளில் 42 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் டியுபிளேசிஸ் (28 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) நல்ல தொடக்கம் கொடுத்தனர். பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி விக்கட் இழப்பின்றி 76 ரன் எடுத்திருந்தது. இது சன்ரைசர்ஸ் அணி எடுத்திருந்ததை விட அதிகம்.
விராட் கோலி 7ஆவது ஓவரிலும், அடுத்த வீரர் வில் ஜேக்ஸ் அடுத்த ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதற்குடுத்து ஆட வந்த ரஜத் படிதர் (9 ரன்) மற்றும் சௌரவ் சௌஹான் (பூஜ்யம் ரன், கோல்டன் டக்) இருவரும் சொற்ப ரன்னுக்கு அவுட்டாயினர். 9.3ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஆடவந்தார். அப்போது பெங்களூரு நிச்சயத் தோல்வி என்ற நிலையில் இருந்தது.
ஆனால் கார்த்திக் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 35 பந்துகளில் 5 ஃபோர் மற்றும் 7 சிக்சர்களுடன் 83 ரன் அடித்து பெங்களூரு அணியின் வெற்றிக் கனவை உயிரோடு வைத்திருந்தார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய மஹிபால் லோமர் (11 பந்துகளில் 19 ரன்) மற்றும் அனுஜ் ராவத் (14 பந்துகளில் 25 ரன்) இருவரும் தினேஷ் கார்த்திக் அளவிற்கு ஆடாததால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 262 ரன் கள் மட்டுமே எடுத்து தொல்வியைத் தழுவியது.
சன்ரைசர்ஸ் அணியின் ட்ராவிஸ் ஹெட் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நாளை கொல்கொத்தாவில் ராஜஸ்தான் ரயல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
15.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 6 | 5 | 1 | 10 | 0.767 |
கொல்கொத்தா | 5 | 4 | 1 | 8 | 1.688 |
சென்னை | 6 | 4 | 2 | 8 | 0.726 |
ஹைதராபாத் | 6 | 4 | 2 | 8 | 0.502 |
லக்னோ | 6 | 3 | 3 | 6 | 0.038 |
குஜராத் | 6 | 3 | 3 | 6 | -0.637 |
பஞ்சாப் | 6 | 2 | 3 | 4 | -0.218 |
மும்பை | 6 | 2 | 4 | 4 | -0.234 |
டெல்லி | 7 | 2 | 5 | 4 | -1.185 |
பெங்களூரு | 6 | 1 | 5 | 2 | -1.124 |