- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
32ம் நாள்: ஐபிஎல் 2024 – 22.04.2024
மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
மும்பை அணியை (176/9, திலக் வர்மா 65, நெஹல் வதேரா 49, முகம்மது நபி 23, சந்தீப் ஷர்மா 5/18) ராஜஸ்தான் அணி (18.4 ஓவரில் 183/1, யஸஷ்வீ ஜெய்ஸ்வால் 104*, ஜாஸ் பட்லர் 35, சஞ்சு சாம்சன் 38) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 6 ரன்) மற்றும் இஷான் கிஷன் (பூஜ்யம் ரன்) இருவரும் இரண்டாவது ஓவருக்குள் ஆட்டமிழந்து ஒரு மோசமான தொடக்கத்தைத் தந்தனர். அவர்களுக்குப் பின்னர் அதிரட் ஆட்டக்காரரான சூர்ய குமார் யாதவ் (10 ரன்) 3.1ஆவது ஓவரில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி தந்தார். பவர் பிளே முடிவில் மும்பை அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 45 ரன் எடுத்திருந்தது.
பத்தாவது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 72/4 ஆக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் திலக் வர்மா (45 பந்துகளில் 65 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்), முகம்மது நபி (17 பந்துகளில் 23 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), நெஹல் வதேர (24 பந்துகளில் 49 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி சற்று நல்ல நிலைக்கு வந்தது. ஆனால், ஹார்திக் பாண்ட்யா (10 ரன்), டிம் டேவிட் (5 பந்துகளில் 3 ரன்), கோயட்சி (பூஜ்யம் ரன்), பியுஷ் சாவ்லா (1 ரன்), பும்ரா (1 ரன்) என மீதமுள்ள அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடாததால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது.
180 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான யஸஷ்வி ஜெய்ஸ்வால் (60 பந்துகளில் 104 ரன், 9 ஃபோர், 7 சிக்சர்) ஆட்டமிழக்காமல் 18.1ஆவது ஓவர் வரை ஆடினார். மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 7.6ஆவது ஓவர் வரை ஆடி 35 ரன் சேர்த்தார். அதன் பின்னர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த அணித்தலைவர் சஞ்சு சாம்சன் (28 பந்துகளில் 38 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடி ராஜஸ்தான் அணிக்கு 18.4 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 183 ரன் எடுக்க உதவினார். இதனால் ராஜஸ்தான் அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி கொண்டது.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மா தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
22.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 8 | 7 | 1 | 14 | 0.698 |
கொல்கொத்தா | 7 | 5 | 2 | 10 | 1.206 |
ஹைதராபாத் | 7 | 5 | 2 | 10 | 0.914 |
சென்னை | 7 | 4 | 3 | 8 | 0.529 |
லக்னோ | 7 | 4 | 3 | 8 | 0.123 |
குஜராத் | 8 | 4 | 4 | 8 | -1.055 |
மும்பை | 8 | 3 | 4 | 6 | -0.227 |
டெல்லி | 8 | 3 | 5 | 6 | -0.477 |
பஞ்சாப் | 8 | 2 | 6 | 4 | -0.292 |
பெங்களூரு | 8 | 1 | 7 | 2 | -1.046 |