IPL 2024: தோனியின் கடைசி ஓவர் தரிசனம், ஒரு சிக்ஸ்… சிஎஸ்கே ரசிகர்களுக்கு போதுமே!

ipl 2024 - 2026

42ம் நாள்: ஐபிஎல் 2024 – 01.05.2024 

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

சென்னை அணியை (162/7, ருதுராஜ் கெய்க்வாட் 62, அஜிங்க்யா ரஹானே 29, சமீர் ரிஸ்வி 21, மொயீன் அலி 15, தோனி 14, ஹர் பிரீத் ப்ரார் 2/17, ராஹுல் சாஹார் 2/16) பஞ்சாப் அணி (17.5 ஓவர்களில் 163/3, ஜானி பெயர்ஸ்டோ 46, ரிலீ ரோஸ்கோ 43, சாம் கரண் 26*, ஷஷாங்க் சிங் 25*, பிர்ப்சிம்ரன் சிங் 13) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.

பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் சென்னை அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான அஜிங்க்யா ரஹானே (24 பந்துகளில் 29 ரன், 5 ஃபோர்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (48 பந்துகளில் 62 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். ரஹானே 8.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த பந்தில் ஷிவம் துபே அவுட்டானார். அதற்கடுத்த பந்தில் ஷிவம் துபே கோல்டன் டக் வாங்கி அவுட்டானார்.

அவருக்குப்பின்னால் விளையாட வந்த ஜதேஜா 4 பந்துகளில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ஆடவந்த சமீர் ரிஸ்வி  (23 பந்துகளில் 21 ரன்), மொயீன் அலி (9 பந்துகளில் 15 ரன்), எம். எஸ். தோனி (11 பந்துகளில் 14 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சென்னை அணி  இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்திருந்தது. 

163 ரன் என்ற சற்றே கடின இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரப் சிம்ரன் சிங் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜானி பெயர்ஸ்டோ (30 பந்துகளில் 46 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) மூன்றாவதாகக் களம் இறங்கிய ரிலீ ரோஸ்கோ (23 பந்துகளில் 43 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.

அதன் பின்னர் ஆடவந்த ஷஷாங்க் சிங் (ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 25 ரன்) மற்றும் சாம் கரண்  (ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 26 ரன்) இருவரும் நன்றாக ஆடி பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். அந்த அணி 17.5 ஓவரிலேயே 3 விக்கட் இழப்பிற்கு 163 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல் போட்ட்களில் சென்னை அணியை தொடர்ந்து ஐந்தாவது முறையாக பஞ்சாப் அணி வென்றிருக்கிறது.  

பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிரார் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

01.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 981160.694
கொல்கொத்தா963121.096
லக்னோ1064120.094
சென்னை1055100.627
ஹைதராபாத்954100.075
டெல்லி115610-0.442
பஞ்சாப்10468-0.062
குஜராத்10468-1.113
மும்பை10376-0.272
பெங்களூரு10376-0.415

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories