சிலைப் போர்: முகர்ஜி சிலையை சேதப் படுத்திய 7 பேரும் மாணவர்கள்!

இந்தியா சற்றுமுன்

சிலுவைப் போர்கள் குறித்து வரலாற்றுப் பாடங்களில் படித்த மாணவர்கள், சிலைப் போரில் ஈடுபட்டுள்ளனர் என்பது வருந்தத் தக்க செய்தி. கோல்கத்தாவில் பாஜக.,வின் முன்னோடிக் கட்சியான ஜன சங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் சிலையை சேதப் படுத்தியதாக 6 பேர் கைது செய்யப் பட்டனர்.

திரிபுராவில் பாஜக., வெற்றி பெற்றதை அடுத்து, அங்கே லெனின் சிலை அப்புறப் படுத்தப் பட்டது. இதை அடுத்து சிலை அரசியல் பல இடங்களில் தொடங்கிவிட்டது. கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கம் உள்ள மேற்கு வங்கத்தின் கோல்கத்தாவில் ஜன சங்க நிறுவனர்களில் ஒருவரான ஷ்யாம பிரசாத் முகர்ஜியின் சிலை சேதப் படுத்தப் பட்டது. அது தொடர்பாக இப்போது 7 பேர் விசாரிக்கப் பட்டு வருகின்றனர். அவர்கள் ஜாதவ்புர் பல்கலைக் கழக மாணவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது நடப்பது சிலைப் போர் என்று கூறியுள்ளனர் அவர்கள். நாட்டின் இது போன்ற பதற்ற சூழலை உருவாக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளார். உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை பதிலாகாது என்று கூறியுள்ளார் மாநில அமைச்சர் சொவந்தேப் சட்டோபாத்யாய. மேலும், சேதப்படுத்தப்பட்ட சிலையை அரசு சீரமைக்கும் என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.